◄•───✧ உ ✧───•► || No:1.Telegram சேனல் ஆன்லைன் நேரடி இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும். || நமது குழுவில் நாள்தோறும் ஆன்மீகம்,மருத்துவம், ஜோதிடம்,தியானம், யோகா,ரெய்கி,பெண்கள் நலம், ஹிந்தி,திருமுறை,மனதை பற்றி, யூடியூப் வீடியோ பதிவிடப்படும். || We also post daily Sivan Update in our Blog Page. So Kindly Follow Our Blog Page.

03/08/2023

சிவன் பற்றிய முழு தகவல் வேண்டுமா !

                      ஓம்சிவாயநமக!

சிவன்- முழுமுதல் காக்கும் கடவுள்

பெருமான்- சைவ சமய நெறிகளின் தலைவன். 

வேறுபெயர்கள்- கயிலைநாதன், சிவபெருமான், சதாசிவம், நமச்சிவாயன், ருத்ரன், ஆலாலகாலன், நீலகண்டன்.
கிரகங்களின் சேர்க்கை நிகழும்போது நீர்நிலைகளில் நீராடுவது ஆயுள்மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஞானம் சேர்த்து அறிவினை விசாலமாக்கும்.

உகந்த நாட்கள்சிவராத்திரி, மகாசிவராத்திரி, ஆருத்ர தரிசனம், திங்கட்கிழமை, பௌர்ணமி, பிரதோஷ தினங்கள் சிறப்பு, எந்நாளும் வழிபடலாம்.

உகந்த மலர்கள்- தும்பை, செம்பருத்தி, முல்லை, மருது, மல்லி, வில்வம், சங்கு சிறப்பு. தாழம்பூ தவிர மற்ற பூக்களை உபயோகிக்கலாம்.
மகாகும்பமேளா- பொதுவாக சூரியன் மேஷராசிக்கும், குருபகவான்-பிரஹஸ்பதி கும்பராசியிலும் பிரவேசிக்கும் போது கும்பமேளா நடைபெறும். பிரஹஸ்பதி, சூரியன் இரண்டும் சிம்ம ராசியில் பிரவேசிக்கும் நாள் மாகா கும்பமேளா நாளாகும். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது வெளிப்பட்ட அமிர்தம் அசுரர்களிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக பெருமாள் எடுத்துக்கொண்டு ஓடினார். 12நாட்கள் (நமக்கு 1நாள் ஒருவருடம்) அசுரர்கள் துரத்தினர். அப்படிச் செல்லும்போது சில துளிகள் கீழே சிந்தின. அவை விழுந்த நான்கு இடம் அலகாபாத்-பிரயாகை (திரிவேணிசங்கமம்), நாசிக் (கோதாவரி), உஜ்ஜயினி (ஷிப்ரா நதி), ஹரித்துவார் (கங்கை). அமுதம் விழுந்த நீர் நிலைகளில் அன்றைய தினம் அமுதம் பொங்குவதாக ஐதீகம். 6 வருடத்திற்கு ஒருமுறை அலஹாபத்தில் நடப்பது அர்த்த கும்பமேளா எனப்படும். 12 வருடங்களுக்கு ஒருமுறை நடப்பது பூர்ண கும்பமேளா. மகா கும்பமேளா என்பது 12 பூர்ண கும்பமேளாக்களுக்கு ஒருமுறை வருவது. இது அலகாபாத்தில் மட்டுமே நடக்கும். அன்றைய தினம் சிவன் குருவாக இருந்து பிரமனுக்கும் தேவர்களுக்கும் உபதேசம் செய்கிறார்.
மகாமகம்- 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசிமாத மகநட்சத்திர நாளில் குருபகவான் சிம்மராசிக்கு வருவார். அன்று புண்ணிய நதிகள் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி ஆகிய அனைத்தும் தங்களின் பாவங்களைப் போக்க கும்பகோணம் மகாமகக் குளத்தில் வந்து நீராடுவர். அன்று அங்கு நீராடல் சிறப்பு. 144 வருடத்திற்கு ஒரு முறை மாமாங்கமாகும்.
மாசிமகம்- மாசிமாதபௌர்ணமி மகம் நட்சத்திரத்தில் அமையும். மாசிமாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம். சிம்மராசிக்கு உரிய மகநட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது விசேடம். இறைவனை கடலில் நீராட்டுவது வழக்கம். அடியவர்களும் நீராடி புண்ணியம் சேர்த்தலாகும். அன்றுதான் அம்பிகை அவதரித்த நாளாகும். 
வணங்கும்முறை-  கோவிலுக்கு அருகில் சென்றதும் கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும். கோபுரதரிசனம் கோடிபுண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. உள்ளே சென்றதும் முதலில் துவஜஸ்தம்பம் எனும் கொடிமரத்தின் முன்பு எட்டு அங்கங்களும் தரையில் படும்படி விழுந்து வணங்கி எழவும். நந்தி பகவானின் வாலைப் பக்தியுடன் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ளவும். அங்கிருந்தபடியே நந்தியின் கொம்புகளிடையே மூலத்தானத்தில் உள்ள லிங்கப் பெருமானைப் பார்த்து வணங்கவும். கோவிலின் உள்ளே இடதுபுறம் இருக்கும் விநாயகரை வணங்கி கருவரைக்குச் செல்லவும். வழியில் தீபமேற்றும் இடத்தில் தீபம் ஏற்றி அங்கிருந்தபடியே அதை இறைவனுக்கு காட்டி பின் அதற்குரிய இடத்தில் வைக்கவும். ஆண்கள் மேலாடை இல்லாமல் தரிசனம் செய்வது சிறப்பாகும். கருவறையில் இடப்பக்கம் ஆண்களும் வலது புறம் பெண்களும் தரிசனம் செய்தல் வேண்டும். 
இறைவனுக்கு நெய்வேத்தியம் என்பது சர்வ வல்லமை படைத்த இறைவனுக்குச் சொந்தமானதை அவருக்குத் தந்து அதையே நாம் அவரின் அருளாசியுடன் பிரசாதமாக பெற்று புனித உணர்வுடன் உட்கொள்கிறோம் என்பதாகும். நீங்கள் கொண்டுவந்த பழங்கள், பூக்கள் மற்றும் அர்ச்சனைக்குரிய பொருள்களை அர்ச்சகரிடம் கொடுத்து விட்டு அமைதியாக இறைவனின் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டிருங்கள். அர்ச்சகர் மந்திரங்கள் சொல்லி மணி ஒலி எழுப்பும்போது கண்களை மூடாமல் இறைவனைப் பார்த்து மனதாற வணங்குங்கள். ஆராதனை செய்த தீபத்தை ஏற்று திருநீறு பெற்று நமசிவாயா எனச்சொல்லி நெற்றியில் மூன்று விரலால் இட்டுக் கொள்ளவும். சில கோவில்களில் ஒரே இடத்தில் இருந்து ஐயனோடு அம்மையும் தரிசனம் செய்யும் வண்ணம் இருக்கும். 
அம்மனை தரிசிக்க செல்லும் வழியில் தீபமேற்றும் இடத்தில் தீபம் ஏற்றி அங்கிருந்தபடியே அதை இறைவிக்கு காட்டி பின் அதற்குரிய இடத்தில் வைக்கவும். அங்கு அப்படியே மனமுருகி அம்மையிடம் வேண்டிக் கொள்ளுங்கள். சில கோவில்களில் அம்மன் சன்னதி தனித்து இருக்கும். அம்மன் சன்னதியின் சுற்றில் சண்டிகேஸ்வரி இருப்பார். அவரை வணங்கவும். பெரிய கோவில்களில் தலமரம் இருக்கும். அங்கு வணங்கியபின் அடுத்து ஸ்ரீசுப்ரமண்ய சுவாமியை வணங்கவும். பின் பரிவார தேவதைகளை வணங்கவும். துர்க்கை சண்டிகேசுவரரை வணங்கி நவகிரகங்களை வல இடமாக ஒன்று அல்லது ஒன்பது சுற்றுகள் சுறிவந்து வணங்கவும். பிறகு நடராசர், சனி பகவான் தனி சன்னதி, காலபைரவர், சந்திரன் சூரியன் சன்னதிகளில் வணங்கி கோவிலை உள்சுற்றாக சுற்றிவந்து கொடிமரத்தின் முன்னால் சாஷ்டாங்கமாக வீழ்ந்து இருகை கூப்பி வணங்கி எழுந்திருந்து மண்டபத்தில் இறை சிந்தனையுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்து பின் புறப்படுங்கள்.

 

FOLLOW US :  Telegram | YouTube | Instagram | Facebook | Twitter

No comments:

Post a Comment

Om Namah Shivaya

Tomorrow night 8pm Free online class

◄•─────✧உ✧─────•► சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை பதிவு எண்:100/2024 டெலிகிராம் சேனல் நேரலை. சிறப்பு விருந்தினர்: Dr.சௌபர்னிகா  BSM...