மூட்டு வலி |
மூட்டு வலி என்பது நமது தினசரி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக அமைந்து விடுகிறது... இந்த மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேல் தான் வருகிறது.. எத்தனை பணம் செலவழித்தாலும் பரவாயில்லை இந்த மூட்டு வலி மட்டும் போனால் போதும் என்று தான் இருக்கிறார்கள்...
ஆனால் உண்மையில் இந்த மூட்டுவலிக்கான தீர்வை தேடி நீங்கள் எங்கேயும் அலைய வேண்டிய அவசியம் இல்லை.. உங்களது அருகிலேயே இருக்கும் சில மூலிகைகளே இதற்கு மருந்தாக அமைகின்றன..
கஸ்தூரி மஞ்சள் |
கஸ்தூரி மஞ்சள்
கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டு வீக்கம், மூட்டு வலி குறையும்.
விளக்கெண்ணை |
விளக்கெண்ணை
விளக்கெண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சுப் பழச்சாற்றில் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும்.
மூட்டு வீக்கம்
கடுகுரோகிணி, ஆதண்டை வேர், சங்கன் வேர், புங்கன் வேர் ஆகியவற்றை இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். முடக்கொத்தான் சாறு, வெங்காயச் சாறு, சிற்றாமணக்கு எண்ணெய் ஆகியவற்றுடன் பொடிகளை கலந்து எட்டு மணி நேரம் வெயிலில் காயவைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டு வீக்கம் குறையும்.
மூக்கிரட்டை வேர் |
மூக்கிரட்டை வேர்
மூக்கிரட்டை வேரை கைப்பிடியளவு எடுத்து நன்கு கசக்கி அதனை, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.
கணப்பூண்டு இலை |
மூட்டுக்களில் கட்டவும்
கணப்பூண்டு இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.
பூண்டு |
பூண்டின் இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு நன்கு வதக்கி மூட்டில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.
ஆமணக்கு வேர் |
ஆமணக்கு வேர்
ஆமணக்கு வேரை நன்கு சுத்தம் செய்து 4 லிட்டர் தண்ணீர் விட்டு 1 லிட்டராக வற்றும் வரை நன்றாக கொதிக்க விடவும். பின்னர் அதனுடன் விளக்கெண்ணெய் கலந்து நீர் முழுவதும் ஆவியாகி எண்ணெய் மட்டும் இருக்கும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் அந்த எண்ணெயை வடிகட்டி மூட்டுகளில் தடவி வந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகியவை குறையும்.
உபயோகிக்கும் முறை:
இந்த எண்ணெயை தினமும் குளிப்பதற்கு முன்னர் மூட்டுகளில் நன்றாக தேய்த்து 15 நிமிடங்களுக்கு பிறகு குளியுங்கள். குளித்த பின்னர் இந்த எண்ணெயை மீண்டும் மூட்டுகளில் தேய்த்து மூட்டுகளை துணியால் நன்றாக கட்டி வைத்து வந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் குறையும்
கடுகு எண்ணெய் |
கடுகு எண்ணெயுடன் 5 மடங்கு விளக்கெண்ணெய் கலந்து சிறிது கற்பூரம் சேர்த்து மூட்டு வலியின் மீது தேய்த்து வர மூட்டு வலி குறையும்.
FOLLOW US : Telegram | YouTube | Instagram | Facebook | Twitter
மேலும் இதுபோல் தகவல் மற்றும் மருத்துவ ஆலோசனை மருத்துவர்களிடம் ஆலோசிக்க வேண்டும் என்றாலும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
#sivasivaanbaesivam #sivan #medical #medicaltips
No comments:
Post a Comment