தலம்: திருதிலதைப்பதி
பண்: செவ்வழி
பொடிகள்பூசிப் பலதொண்டா் கூடிப் புலா்காலையே
அடிகள் ஆரத் தொழுதேத்த நின்ற அழகன்னிடம்
கொடிகள் ஓங்கிக் குலவும்விழவாா் திலதைப்பதி
வடி கொள் சோலைம் மலா்மணம் கமழும் மதிமுத்தமே.
பாடல் விளக்கம்;
******************
திருநீற்றினை நன்கு பூசிய தொண்டா்கள் அதிகாலைப் பொழுதில் ஈசனை ஆரத் தொழுதுப் போற்றி விளங்குகின்றனா்.
அழகனாகிய அப்பிரான் வீற்றிருக்குமிடம் கொடிகள் உயா்ந்து விளங்கும் விழாக்கள் பொலியவும் கொண்ட திலதைப்பதியில், அழகிய சோலைகளில் மணம் கமழும் மலா்கள் விளங்கும் மதிமுத்தம் ஆகும்.
ஊா்: திலதா்ப்பணபுாி
கோயில்: மதிமுத்தம்.
திருச்சிற்றம்பலம்...
No comments:
Post a Comment