◄•───✧ உ ✧───•► || No:1.Telegram சேனல் ஆன்லைன் நேரடி இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும். || நமது குழுவில் நாள்தோறும் ஆன்மீகம்,மருத்துவம், ஜோதிடம்,தியானம், யோகா,ரெய்கி,பெண்கள் நலம், ஹிந்தி,திருமுறை,மனதை பற்றி, யூடியூப் வீடியோ பதிவிடப்படும். || We also post daily Sivan Update in our Blog Page. So Kindly Follow Our Blog Page.

06/04/2025

Today News


🙏🪷 ஓம் நமசிவாய 🪷🙏 

*தேர் இழுப்பதினால் இவ்வளவு நன்மைகளா?*

🕉️நிலக்கிழார் ஒருவர் சொத்து தகராறினால் மன அமைதி இழந்து தவித்த நேரத்தில் காஞ்சி மஹாபெரியவரை தரிசித்தார். அவருடைய அகவேதனைகளை உணர்ந்த பெரியவர் அவரிடம் “ தேர் இழுத்திருக்கிறீர்களா"? “ என வினவ, இல்லை என்றார் நிலக்கிழார்.

🕉️ஒரு முறை தேர் வடம் இழுத்து விட்டு பிறகு உங்கள் பணியைத் தொடருங்கள் எல்லாம் நன்றாக முடியும், என ஆசீர்வதித்தார் மஹா பெரியவர். 

🕉️மூன்று மாதங்களுக்குப் பிறகு புன்னகையுடன் பெரியவரை சந்தித்த நிலக்கிழார், தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்தது, தர்மம் தோற்பதில்லை என்ற நம்பிக்கை வந்துவிட்டது என்றார்.

 🕉️தேர் இழுத்தாயோ என பெரியவர் வினவ ஆம் அதன்பின் தான் எல்லாம் நன்றாக நடந்தது. என்றார் நிலக்கிழார்.

🕉️தேர் என்பது நடமாடும் கோயில். முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், ஆலயத்துக்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் தேர்த் திருவிழா அன்று இறைவனைக் கண்ணாரக் கண்டுகளிக்க முடியும்.

🕉️கோயிலில் தெய்வசக்தி எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்த்திருவிழா அன்றோ தெய்வ சக்தி ஊர் முழுவதும் வெளிப்படும் ஊருக்குள் இருக்கும் தீய சக்திகள் அனைத்தும் அப்போது பறந்தோடி விடும். தேர் இழுப்பவர்களில் பேதங்கள் கிடையாது. எல்லாவற்றிலும் பேதங்கள் பார்க்கும் மனிதர்களாலேயே தம் பக்கம் இழுக்க முடியும் என்பதே தேரோட்டம் உணர்த்தும் உண்மை.

🕉️தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும், தேர் இழுப்பதற்கும், தேரோட்ட திருவிழாவுக்கு உதவி செய்வதற்கும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால்தான் நம்மால் தேர்த்திருவிழாவில் கலந்து கொள்ள முடியும். 

🚩தேர்வடத்தைத் தொட்டுக்கொண்டு ஆயிரக்கணக்கான பேர் நிற்கும்போது அங்கே அபரிமிதமான மனித சக்தி பொங்கத் தொடங்குகிறது. அத்தனை மனிதர்களும் கடவுளின் அருளை வேண்டி கூடியிருக்கும் போது அங்கே பிரார்த்தனையின் சக்தி மகத்தானதாக மாறுகின்றது. 

🚩பக்தியுடன் தெய்வத்தை இழுக்கும் சக்தி தங்களுக்கு இருப்பதாக மக்கள் கருதுவதும் பக்தர்களின் பக்திப் பெருக்கைக் கண்டு தெய்வம் ஓடி வருவதும் தேர்த்திருவிழா வின் மகத்துவம் ஆகும். அந்த இடத்தில் தெய்வத்தின் சாநித்யம் அதிகரித்துள்ள இடத்தில் இருப்பதற்கே ஒருவரின் ஜாதகம் சரியாக அமைய வேண்டும்.

🚩நிலக்கிழாரின் கர்மவினை அவரைத் தேர்த்திருவிழாவில் பங்கெடுக்க முடியாமல் செய்திருந்தது. ஆனால் ஒரு மஹானை தரிசித்த மாத்திரத்தில் அவரது பாப வினைகள் நீங்கியதுடன் தேர்த்திருவிழாவிலும் கலந்துகொள்ள செய்தது. அதனால் கடவுளின் அருள், பலம், ஒன்றுசேர வழக்கும் அவருக்கு சாதகமானது. 

ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம்.

நமது அறக்கட்டளை இணையதளம் லிங் 👇

http://www.sivasivaanbaesivam.com

 திருவாரூர் வீதிகளில் ஆழித்தேர் அசைந்தாடி வரும் போது திருவாரூரில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஆரூரானுக்கு அரஹரா’ என்று வானும், மண்ணும் அதிரும் வகையில் பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து இழுக்க அலங்காரப் பட்டுத்துணிகளும், பூச்சரங்களும் அசைந்தாட திரூவாரூரான் அமர்ந்திருந்த ஆழித்தேர் ஆடி அசைந்து நான்கு வீதிகளிலும் வலம் வரவிருக்கும் திருவாரூர் தேரினை கண்டு, மனம் மகிழ மெய்சிலிர்க்க இன்னும் 2 நாட்கள் உள்ளது. 
07.04.2025 - திங்கள்கிழமை

*ஆரூரா தியாகேசா*

*ஆசியாவின் மிக பெரிய தேர் திருவிழா* 

டெலிகிராம் சேனல் லிங் 👇

https://t.me/sivasivaambaesiva

*என்றும் சிவப்பணியில் சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை பதிவு எண்:100/2024*

No comments:

Post a Comment

Om Namah Shivaya

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

*நமசிவாய வாழ்க*   *சித்திரை 1 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, எங்கள் அறக்கட்டளையின் சார்பாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும...