◄•───✧ உ ✧───•► || No:1.Telegram சேனல் ஆன்லைன் நேரடி இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும். || நமது குழுவில் நாள்தோறும் ஆன்மீகம்,மருத்துவம், ஜோதிடம்,தியானம், யோகா,ரெய்கி,பெண்கள் நலம், ஹிந்தி,திருமுறை,மனதை பற்றி, யூடியூப் வீடியோ பதிவிடப்படும். || We also post daily Sivan Update in our Blog Page. So Kindly Follow Our Blog Page.

08/09/2025

ஆன்மீக சிந்தனைகள்


🌺மறுபிறவி ரகசியங்கள்*

அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹

இதுவரை கூறப்படாத மறுபிறவி ரகசியங்களை மனிதர்கள் உணர இன்று பகிர்கிறேன்.

நன்றி:Thedal Thamilzhan முகநூல் பக்கத்தில் படித்த நல்ல பதிவை பகிர்ந்துள்ளேன் 

சிருஷ்டியின் நியதி :- பிறவித்தொடர் அறுப்போம்.

இன்று மறுபிறவி பற்றிய சூட்சம ரகசியத்தை காண்போம் ..,!

மறுபிறவி பற்றி நான் அறிந்த வரையில் மிக எளிமையான விளக்கத்தில் கூறியது வள்ளலார் மட்டும் தான். 

பல மதங்கள் மறு ஜென்மம் என்பதை மறுக்கிறது. 

ஆனால் இந்து மதம் மட்டும் 
அது உண்மை என்று திட்டவட்டமாக கூறுகிறது

கீதையில் கண்ணனே கூறியுள்ளார், மானிட ஆன்மா என்பது அழியாது அது மீண்டும் பிறக்கும் என்றும் மனிதன் கர்மம் செய்ய கடமை பட்டவன் என்றான் .

இங்கு கர்மம் என்பது புண்ணிய பாவ கணக்கு.

மனித பிறவிக்கு அடுத்து தேவ, தெய்வ பிறப்பு தான். 

இது எப்படி சாத்தியம் என்றால், ஒரு மனிதன் 1,2,3 வகுப்பு படிக்கிறான் என்றால் நிறைய மதிப்பெண் வாங்கினால் அடுத்த வகுப்பிற்கு செல்கிறான்.

அது போலவே பிறப்பு என்பது செடி, கொடி, மரம், பறவை, விலங்கு, மனிதன், தேவர்கள், தெய்வம் என்ற வகுப்புகளாக பிரிந்து வருகிறது. 

இதில் பாவம் செய்தால் 
அந்த வகுப்பிலேயே
மீண்டும் விழுகிறோம்.

*கவனிக்க மீண்டும்* 
*1 ம் வகுப்பு செல்வதில்லை*!

வள்ளலார் என்கிற ஞான சித்தர் *மறுபிறவி* பற்றிய கூற்று...

இப்போது வள்ளலார் கூறுவதை கேட்போம்.

ஒருவன் ஒரு வீட்டை விட்டு காலி செய்து புது வீட்டிற்க்கு காசு கொடுத்து குடி போகிறான் என்றால் அவன் ஏற்கனவே ஒரு வீட்டில் தங்கினான் என்பதை மறந்து விட வேண்டாம். 

அது போலத்தான் ஆன்மா ஒரு உடம்பில் இருந்து வேரு ஒரு உடம்பிற்க்கு குடி பெயர்கிறது.

அவன் செய்த நன்மை பொறுத்து (நிறைய செல்வத்தை) வீடு என்கிற உடம்பு அமைகிறது

கர்ம வினை என்றால்?

இதில் கர்ம வினை என்பது அவன் செய்த பாவ மூட்டை .

அது அடுத்த பிறவியிலும் தொடர்கிறது. 

இது எப்படி என்றால் முன்பு கூறியதை போல வேறு ஒரு வீட்டிற்க்கு போன மனிதனின் தீய நண்பன் அந்த வீட்டுக்கும் போவான். 

மீண்டும் அவ்வீட்டை கெடுப்பான்

அது போல தான் கர்மா என்கிற பாவமும் ஆன்மாவுடன் போகும் மீண்டும் தவறு செய்ய வைத்து மனித வகுப்பிலே படிக்க செய்கிறது. 

அதனால் முடிந்தவரையில் பாவம் செய்யாமல் தீய நட்பு கொள்ளாமல் நன்மை செய்து வாழ்ந்தால் இந்த பிறவியை கடக்கலாம்.

புண்ணியத்தின் பலன்?

அப்போது நாம் செய்த நன்மையின் பலன் என்பது எங்கே என்றால் நாம் செய்த பாவத்திற்க்கு போகும் . 

இதை விளக்கமாக சொன்னால் நன்மை என்பது நாம் சம்பாதித்து வாங்கும் பணம் போல, பாவம் என்பது செலவு செய்வதற்க்கு வாங்கி கடன் போல.

கடன் நிறைய வாங்கி வைத்து பணம் சம்பாதித்தால் அது கடனுக்கு தான் போகும். சொத்தில் சேராது. 

அதாவது புண்ணியத்தில் சேராது.

மறுபிறப்பு என்றால்?

மறுபிறப்பு என்பது அடுத்த உடலைத் தேடுவதாகும். 

ஒரு உடல் இறந்தவுடன் அந்த ஆன்மா அடுத்த உடலை சென்றடைகிறது .

தாயின் வயிற்றில் கரு பந்து போல வந்தவுடன் அந்த கருவுக்கு உரு சேர்ப்பது போல ஆன்மா வருகிறது.

குழந்தை தாயின் கருவறை விட்டு வெளியே வரும் போது தனது பூர்வ ஜென்ம நிகழ்வுகளை மறந்து விடுகிறது. 

குழந்தை வெளியே வந்து 
இடது கையை விரித்தவுடன் அதன் புண்ணிய கணக்கு தொடங்குகிறது. 

வலது கையை விரித்தவுடன் அதன் பாவ கணக்கு தொடங்குகிறது.

பிறக்கும் குழுந்தையின் ஆயுட்காலம் என்பது ஆணின் விந்து ஐந்து விரற்கடை அளவு பாய்ந்தால் அதன் ஆயுட் காலம் நூறு வயது என்றும் அடுத்தடுத்த விரல் அளவு குறைவது போல் ஆயுள் மாறும். 

மேலும் இது பற்றி தெளிவாக தெறிய தாமரை நூலகம் வெளியிட்டுள்ள சித்தர்கள் உடல் தத்துவம் என்ற நூலை வாங்கி படியுங்கள்....

பழைய ஜென்ம நினைவுகளை திரும்ப பெறவேண்டுமானால் மனதின் ஆழ்நிலைக்கு சென்றால் திரும்ப பெறலாம். 

அது ஒரு ரொக்கார்டு செய்த டேப் போல திரும்ப கேட்கலாம் 

அனால் சுய நினைவு வந்தால் மறந்து விடும்.

உதாரணமாக....
இது எப்படி என்றால் விஜய் டிவி யில் வரும் முன் ஜென்மம் நிகழ்ச்சி பார்த்தால் புரியும் 

அதில் மெஸ்மரிசம் என்ற கலையை உபயோகித்து வெளிக்கொண்டுவருவார்கள்.

பிறப்பு என்றால்?

பலர் ஏழு பிறப்பை ஏழு ஜென்மம் என்று தவறாக புரிந்து வைத்துள்ளனர். 

ஏழு பிறப்பு என்பது நமது உடலைப்போல ஏழு உடல்களை பூமியில் படைப்பார் பிரம்மா, 

மேலும் எழுகின்ற ஒவ்வொரு பிறப்பை தான் அதாவது எழு பிறப்பை தான் பின் வந்தவர்கள் ஏழு பிறப்பு,
ஏழு ஜென்மம் என்று தவறாக கூறுகிறார்கள்.

இறப்பு என்றால்?

இறந்த நபரின் உடலை மீண்டும் எந்த ஆத்மா உள்ளே வராமல் இருக்கஅந்த உடலின் ஒன்பது மற்றும் பத்தாவது வாசலும் அடைக்கப்படும் 

இதில் முதல்மூன்று வாசல் வழியாகத்தான் ஆன்மா 
உள்ளே வரும் அவை,

(1) கண்.....

இறந்தவுடன் இதை மூடிவிடுவர்.

(2) காது.....

தலைக்கு பாகை போல காது ஓட்டையையும் சேர்த்து துணி கட்டுவர்.

(3) நெற்றி.....

 புருவ பூட்டு என்று சித்தர்களால் அழைக்கபடும் நெற்றியில் நாணயம் வைத்து அடைத்துவிடுவர். 

(இதை சிலர் இந்த ஒரு ரூபாய் கூட எடுத்து போக முடியாது என்று காட்ட வைப்பதாக சொல்லுவார்கள்.)

மனிதப்பிறவி தரப்பட்டிருக்கும் நோக்கத்தை மறந்து வாழ்நாளில் அவர்கள் போடுகின்ற ஆட்டம் ஞானிகளுக்கு வேடிக்கையாக இருக்கிறது. 

கபீரின் வரிகளிலே சொல்வதானால்,

"நாற்புரம் காத்தனர் வீரர், கையில் ஏந்திய வாளொடு
பார்த்து நின்றனர் பாரோர்,பிராணன் போனது நமனொடு"

மரண பயம் என்பது சிருஷ்டியின் நியதி.

"தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன்" என்பார் தாயுமானவர்.

எல்லா உயிர்களுக்கும் தத்தம் இனத்தை பாதுகாத்துக் கொள்ள இயற்கை கொடுத்திருக்கும் ஒரு அடிப்படை உணர்வு அது.

மனிதப்பிறவிக்கு மட்டுமே அதை கடந்து செல்லும் சக்தி கொடுக்கப்பட்டிருப்பதால் மரணத்தை வெல்வது என்பது அவன் கடமையாகிறது.

மரணத்தை வெல்வது என்பது பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுபடுவதையே குறிக்கும்.

உடலுக்கு மரணம் உண்டு. 

ஆனால் நாம் உடலையும் கடந்த பேருணர்வை பற்றியிருக்க வேண்டியவர்கள் அன்றோ. 

அதைக் குறித்து சிந்திப்பதை விட்டு எண்பது கோடி ஆசைகளை வளர்த்துக்கொண்டு ஔவை சொல்வதை போல சாகும் வரை சஞ்சலத்திலே உழல்வதின் பயனென்ன !

உண்பது நாழி உடுப்பது 
நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன-கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம் போலச்
சாந்துணையும் சஞ்சலமேதான் 
      (நல்வழி -28)

மேலும் சொல்கிறார்,

மனிதனுடைய தேவையோ நிதம் ஒரு ஆழாக்கு அன்னம், சுற்றிக்கொள்ள ஒரு துண்டு. அதை விட்டு மற்றவையெல்லாம் தேவையற்ற சுமையே. 

- ஔவையார்.

சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளுமில்லை- 

உபாயம் இதுவே மதியாகும்,அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும். 
 (நல்வழி -15)

உபாயம் இதுவே மதியாகும்! 

எதுவே? சிவாய என்று சிந்தித்திருப்பதே அறிவுள்ள செயலாகும். 

விதியை மாற்ற நினைக்கும் எந்த முயற்சியிலும் "விதியே மதியாகிவிடும்". 

அதாவது விதியினுடைய வழியே ஓங்கி நிற்கும். 

இதை விளக்கும் ஒரு சுஃபி கதை.

காலிஃப் பூங்காவில் உலவிக்கொண்டிருக்கும் 
போது மரணதேவனின் தூதன் நின்றிருந்தான். 

"உனக்கு என்ன வேலை?"என்று வினவினான் காலிஃப்.

"இன்றைய பொழுதே உன் நண்பனுக்கு கடைசி தினம்" என்று பதில் வந்தது. 

கவலை கொண்ட காலிஃப் அரண்மனைக்குத் திரும்பி நண்பனை அழைத்து தன்னுடைய சிறந்த குதிரையை அளித்து "மாலைக்குள் பாக்தாத் போய்விடு" என்று விரட்டினான். 

மீண்டும் பூங்காவிற்கு வந்த போது தூதன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். 

"மாலை வரை காத்திருக்க வேண்டுமா?" என்றான் காலிஃப். 

"அவனுக்கு மரணம் பாக்தாத்தில் அல்லவோ! 

அவனுக்காக பாக்தாத்தில் இன்னொரு தூதன் காத்திருக்கிறான். 

அவன் இன்னமும் இங்கேயே உள்ளானே என்று ஆச்சரியப்பட்டு கொண்டிருந்தேன்" என்று சொல்லி மறைந்தான் தூதன். 

விதி காலிஃபாவின் மதியுள் புகுந்து வென்றுவிட்டது. விதியே மதியாகிவிட்டது !

ஆனால் கடவுளையே நம்பினவர்க்கு இந்த கவலை இல்லை. 

தன்னையே எக்காலும் சிந்தித்திருந்த மார்க்கண்டேயனுக்காக கூற்றுவனையும் எட்டி 
உதைத்த சிவனை போற்றி தாயுமானவரும் மரணபயம் பக்தனுக்கேது என்று பாடுகிறார்.

"மார்க்கண்டர்க்காக மறலி பட்ட பாட்டை உன்னிப் 
பார்க்கின் அன்பெர்க்கென்ன பயங்காண் பராபரமே"

(மறலி=எமன்) - 

பரமனை சிந்தித்திருப்பதே சிறந்த வழி என்று ஔவை சொன்னதும் அதனாலேயே..!

உலகில் மனிதப் பிறப்பு உயரிய பிறப்பு. 

ஆனால், பிறப்பின் நோக்கம்? நாம் மீண்டும் மீண்டும் பிறப்பதற்கல்ல. 

நாம் நமது பரம்பரை வழியாக(இதுவே ஜென்மங்கள்/பிறவிகள். ஏனெனில் நாம் ஜீன் மூலமாக நமது முன்னோரின் தன்மைகளை பெற்றிருக்கின்றோம்).

மற்றும் ,

பிறப்பிற்கு பிறகு 12 வயதுக்கு பின்னர் செய்யக்கூடிய பாவங்களையெல்லாம் கரைத்து (பிராயச்சித்தங்கள் மூலம்) அதற்கான பலன்களை அனுபவித்து, கரைத்து எல்லா பாவங்களையும் போக்கிய பின்னர் மரணமில்லாப் பெருவாழ்வு (முக்தி) அடைவதே வாழ்வின் லட்சியமாகும்.

இவற்றை கரைக்க பெரிதும் உதவியாக இருக்கக் கூடிய மிக நம்பகமான மற்றும் வேகமான வழிமுறையே தவம்/யோகம் ஆகும்.

பக்தி பாதையிலும் பாவங்களை விரதம்/யாத்திரைகள் மூலமாக கரைத்துக்கொள்ள முடியும். 

ஆனால் அதற்கு மிக நீண்டகாலம் பிடிக்கும். 

மேலும் அந்த அளவிற்கு நமக்கு ஆயுள்நீட்டிப்பு வேண்டும்.

மேலும் புதிய பாவங்களை பழக்கத்தின் காரணமாக சேர்த்துக் கொள்ளாத மன வலிமை வேண்டும். 

இல்லையென்றால் பாவக்கணக்கு நேராக ஆக 
ஒரு பக்கம் கூடிக் கொண்டே இருக்கும். 

இதனால் பாவக் கணக்கு கரையும் வேகம் குறைவாகவே இருக்கும்.

ஆனால் யோக மார்க்கம் வேகமாக கரைத்துக் கொள்ள வழி காட்டுவதுடன் புதிதாக பாவங்களை சேர்த்துக் கொள்ளாமலிருக்க பழக்கங்களை மாற்றியமைக்கும் மன வலிமையையும் கொடுப்பதால், இருக்கின்ற பாவங்களை மட்டும் கரைத்தால் போதுமென்ற சுதந்திரத்தையும் கொடுக்கும்.

கடலிலிருந்து ஆவியாகும் நீர் பல படிமுறைகளை வழிகளை கடந்து மீண்டும் கடலை அடைவது போல சிவத்திடம் தோன்றிய நாம் மீண்டும் *சிவத்தை* அடைவதே 
நமது நோக்கமாக கொண்டிருத்தல்வேண்டும்.

பிறவித்தொடர் அறுக்கும் பொருட்டுதான் பட்டினத்தார் அவர்களும் இறைவனிடம் இப்படி வேண்டுகிறார்.

"இறைவா எனக்கு மேலும் மேலும் தண்டனைகளையே கொடுத்து எல்லா பாவங்களையும் கரைத்து நீக்கிக்கொள்ள உதவு" என்று.

மேலும் சனீஸ்வரர் ஒருவருடைய திசையில் வருகின்றார் என்றாலே அவர்கள் மிகவும் பயந்து விடுவார். 

அவர் தொடர்ச்சியாக சோதனைகளையே தருவார் என்று. 

ஆனால் அவர் மானிட வாழ்விற்கு மிகவும் உதவியாகவே இருக்கின்றார்.

அவர் ஒவ்வொருவருடைய பாவக்கணக்கையும் கடும் தண்டனைகளையும், சோதனைகளையும் கொடுப்பதன் மூலம் நீக்கி விடுகின்றார். 

அவர் நம்முடைய ஜாதகத்திலிருந்து நீங்கும்போது நம்மை நமது பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியே விலகுகின்றார்.

அதனால் அவர் நம்முடைய திசைக்கு வருகின்றார் 
என்றால் நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

மேலும் அவருடைய காந்த அலைக்கதிர்கள் (இவையே ஒவ்வொரு பாவப்பதிவுகளையும் ஒவ்வொரு மனிதனின் கருமையத்திலிருந்து எடுத்து அதற்கு பலனாக மனக் குழப்பங்களையும் தகுந்த விளைவுகளையும் கொடுக்கிறது) நமக்கு நன்மையே செய்யவேண்டும் என்று தினந்தோறும் சங்கல்பம் செய்வதன் மூலம் அவற்றை நல்லமுறையிலே உபயோகித்துக் கொள்ளலாம்.

விரைவில் பாவப்பதிவுகள் அகலும்போது அவர் நமக்கு அளவில்லா நன்மைகளை செய்வதை நாம் கண்கூடாக பார்க்கலாம். 

ஆனால் இந்த மனநிலை, மன வலிமை எவ்வளவு பேருக்கு சாத்தியமாகும்?

இதனை யோகக்கலை/தவம் ஒருவருக்கு எளிதாக்கி கொடுக்கிறது. 

மனவலிமையை அதிகரித்து தண்டனைகளை ஏற்றுக் கொள்ள மனப்பக்குவம் கொடுக்கிறது.

இவை அனைத்தும் ஊர்வசி பஞ்சரத்தினம்-500 , திருமூலர் திருமந்திரம், திருமூலர் கருக்கிடை 600, மாணிக்கவாசகரின் திருவாசகம், சித்தர்கள் உடல்தத்துவம், யூகி முனி தத்துவம்-300 ஆகிய நூல்களில் இருந்து பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு பற்றி கூறிய தகவல்களிலிருந்து பெறப்பட்டது.

 🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷

 🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺

 🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி சிவபிலகிருஷ்ணன்🦜

இணையதளம் லிங் 👇

http://www.sivasivaanbaesivam.com

 *அனைவரும் நல்வாழ்த்துக்கள்!* 

டெலிகிராம் சேனல் லிங் 👇

https://t.me/sivasivaambaesiva

 *என்றும் சிவப்பணியில் சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை பதிவு எண்:100/2024*

No comments:

Post a Comment

Om Namah Shivaya

Today News

Telegram channel links 👇👇 https://t.me/sivasivaambaesiva Website links 👇👇 www.sivasivaanbaesivam.com WhatsApp channel links ...